கர்நாடக இடைத்தேர்தல்: காங். மஜத., கூட்டணி வெற்றி! எடியூரப்பா மகன் ஷிமோகாவில் வெற்றி!

Published:

07 May18 karnatka - 2026

நடைபெற்று முடிந்த கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ், மஜத., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஷிமோகா நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் பாஜக., வெற்றி பெற்றது!

* பெல்லாரி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் சாந்தாவை விட 1 லட்சத்து 98 ஆயிரத்து 307 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றி! 2004-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாஜக, பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று வந்தது.

* ஜமகண்டி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் குல்கர்னி ஸ்ரீகாந்த் சுப்ராவை விட காங்கிரஸ் வேட்பாளர் நியமகவுடா 39 ஆயிரத்து 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

* ராம்நகர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் சந்திரசேகரை விட மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளர் அனிதா குமாரசாமி 1 லட்சத்து 246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

* மாண்டியா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளரை விட மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளர் சிவராமகவுடா 3 லட்சத்து 24ஆயிரத்து 377 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

* ஷிமோகா நாடாளுமன்ற தொகுதியில் ஜே.டி.எஸ் வேட்பாளர் மதுபங்காரப்பாவை விட பாஜக வேட்பாளரும், எடியூரப்பாவின் மகனுமான ராகவேந்திரா 47,388 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img