பம்பை: “வதந்திகளை நம்ப வேண்டாம்! அமைதியாக இருக்கவும்! நாசம் செய்ய நினைப்பவர்களை அனுமதிக்க மாட்டோம்”
என்று, சபரிமலை சன்னிதானத்தில் இருந்து மாநில ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் வல்சன் திலகனெரி கூறியுள்ளார்.
சபரிமலை நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில், பெண்களை எப்படியாவது அழைத்துச் சென்று சபரிமலையின் நடைமுறைகளை மீறிவிட வேண்டும் என்று பிடிவாதமாக செயல்படுகிறது மாநில அரசு. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து இயக்கங்கள் சபரிமலையில் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டு, பெண்களை அனுமதிக்காமல் தடுத்து வருகிறது.
இதனிடையே, சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு விஷயத்தில் தடுப்பு அரணாக இருந்து செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக., உள்ளிட்ட இயக்கங்களின் பொறுப்பாளர்கள், தாங்கள் விழிப்புடன் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
நேற்றிலிருந்து சபரிமலையில் இருக்கும் பாஜக மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் ரமேஷ், கம்யூனிஸ்ட்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு பலமுறை இலக்கான கண்ணூரைச் சேர்ந்த வல்சன் உள்ளிட்டோர் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினர்.