
திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக மதுக்கடைகளை உடனே மூட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதுபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
#கஜா புயல் காரணமாக அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக தேர்வுகள் 2வது நாளாக நாளையும் ரத்து செய்யப் பட்டுள்ளன.
“கஜா” புயல் காரணமாக 2வது நாளாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாளைய (16ம்தேதி) பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று, பல்கலைக்கழகதேர்வு நெறியாளர் துரையரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16.11.18) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



