hmk petition hrnce - 2026

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரனிடம் இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில், ஆகம விரோதமாக ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோயில் சந்நிதிகளைத் திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு சமர்ப்பிக்கப் பட்டது.

மனு கொடுக்கப் பட்ட போது, சென்னை மண்டல அறநிலையத் துறை இணை ஆணையர் லட்சுமணன், இணை ஆணையர்
சுதர்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமாருடன், மாநில செயலாளர் ராஜேந்திரன் மாநில அலுவலக செயலாளர் குமரவேல் தென் சென்னை மாவட்டத் தலைவர் சீனிவாசன் மத்திய சென்னை மாவட்ட தலைவர் பிரபாகரன் சோழிங்கநல்லூர் தொகுதி தலைவர் குமரேசன் அமல்ராஜ் ஆகியோர் இணைந்து மனு கொடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending