selvisudha - 2026

கைய வெட்டுவேன் என்று வழக்கறிஞர் ஜெகதீசன் விவகாரத்தில் சொன்ன காங்கிரஸ் பிரமுகர் செல்வி சுதா ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 17.09.2018 அன்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிலையினை அவமதித்ததாக கைது செய்யப் பட்டார் ஜெகதீசன். சிலை வழிபாடு கொள்கைக்கு எதிராக கொள்கைகளைக் கொண்ட திராவிட இயக்கத்தினர், தாங்கள் பொட்டு வைத்து, பூச்சூட்டி, அலங்காரம் செய்து வழிபடும் ஈ.வே.ரா. சிலை மீது செருப்பு வீசியதற்காக கோபம் கொண்டார்கள். இதனால், தாங்கள் பயபக்தி செலுத்தும் கடவுள் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை மீது செருப்பு வீசியதற்காக வழக்கறிஞர் ஜெகதீசன் மீது வெகுண்டெழுந்து வழக்குப் பதிவு செய்தார்கள்.

இந்நிலையில், ஜெகதீசனை வன்முறையை தூண்டும் விதத்தில் கையைவிட்டு என்று மோசமாக பேசிய வழக்கறிஞர் சுதா மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்து மக்கள் கட்சியின் எஸ் வீரமணி நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வி சுதா எனது கையை வெட்டுவேன் என்றும் பிரதமர் மோடி அவர்களை கரப்ட் என்றும் கடந்த 22.09.2018 மற்றும் 23.09.2018 ம் நாள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் கூறினார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

மேலும், இந்துக்கள் அனைவரையும் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றார். இந்துக்களை அவமதித்த சுதாவின் பேச்சு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் மீது புகார் அளித்தும் போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது. அதன்படி, crl.o.p.No.30241/2018 ல் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending