அழகிரியை புறக்கணித்த நாகை மாவட்ட தி.மு.க வினர்

சற்றுமுன்
 
 
நாகை மாவட்ட த்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க., பிரமுகர் ஷேக் தாவூத் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அழகிரியை, தி.மு.க.,வினர் புறக்கணித்னர் .
 
அந்த நிகழ்ச்சியில், தி.மு.க., பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
 
தி.மு.க., தலைகள் தென்படாததால் அப்செட்’ ஆன தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிமேடையில், 5 நிமிடம் மட்டுமே மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
 
அழகிரி பேசுகையில், நட்புக்கு இலக்கணமாக விளங்கக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். நான் பதவியில் இருந்தால் சிலர் வருவர். ஆட்சியில் இல்லாத போது போய் விடுவர். என் மீது அன்பு கொண்டவர்களிடம், நான் என்றும் மாறாத நட்பில் உறுதியாக இருப்பேன், என்றார்.
 
 
காரில் புறப்பட ஆயத்தமான அழகிரியிடம் பேட்டி காண சென்ற, செய்தியாளர்களிடம் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது; அப்போது பார்க்கலாம், நான் எதுவும் சொல்லா விட்டாலும், சொல்லியதாக நீங்கள் ஏதாவது எழுத தான் போகிறீர்கள். நீங்களே எழுதிக் கொள்ளுங்கள், என, விரக்தியுடன் கூறிச் சென்றார். அழகிரி புறப்பட்டுச் சென்ற தகவலை உறுதி செய்த பின்னர் தி.மு.க.,வினர், ஒவ்வொருவராக வந்து திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.