Pornography
Pornography

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மாஹிம் பகுதியில் வசிக்கும் 30 வயதான அப்துல் சுஃபியான் ஷேக் என்பவர் ஏற்கனவே கல்யாணமானவர்.

அவர் தனக்கு திருமணமான விஷயத்தை மறைத்து விட்டு, அதே பகுதியில் வசிக்கும் 24 வயதான ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .

இருவரும் ரகசியமாக அந்த ஊரில் உள்ள ஒரு ஜிம்மில் சந்தித்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் அடிக்கடி ஹோட்டலில் சந்தித்து பலமுறை உறவில் இருந்துள்ளனர் .

அப்போது அந்த ஷேக் அந்தரங்க காட்சியை ரகசியமாக கேமேரா வைத்து படம் பிடித்துள்ளார். அதன் பிறகு சில நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணுக்கு அவரின் காதலன் ஷேக்குக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் தெரிந்தது.

அதனால் அந்த பெண் அவரை விட்டு விலக தொடங்கியதும் அந்த ஷேக் அவர்கள் அந்தரங்க காட்சி கொண்ட வீடியோவை காமித்து அந்த பெண்ணை மிரட்ட தொடங்கினார் .

அதை ஊடகத்தில் வெளியிடுவேன் என்று கூறி அந்த பெண்ணிடமிருந்து ரூ .58.11 லட்சம் மதிப்புள்ள 120 கிராம் தங்க நகைகளை வாங்கிக்கொண்டார் .

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

அந்த ஷேக் அந்த நகைகளை திருப்பி கொடுக்காமல் மேலும் மிரட்டவே, பயந்த அந்த பெண் ஷேக் மீது போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த போது அந்த ஷேக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending