முதியோர்களுக்கு முதல் ஆன்லைன் வானொலி!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
radio
radio

உலக மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி சென்னையில் முதியோர்களுக்கான முதல் ஆன்லைன் வானொலி நிலையம் வருகின்ற 21ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இதனை அன்னை அன்பாலயா அறக்கட்டளை இந்த வானொலி நிலையத்தை தொடங்க உள்ளது. இந்த வானொலி நிலையத்தை முழுவதும் மூத்த குடிமக்களே நடத்துகிறார்கள்.

சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள அன்னை அன்பாலயா வளாகத்தில் இந்த வானொலி நிலையம் தொடங்கப்படுகிறது.

நாட்டில் மத்திய சமூக மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தற்போது 10 சமூக வானொலி நிலையங்களுக்கு அங்கீகாரம் அளித்தது.

இதில் அன்னை வானொலி நிலையமும் ஒன்று. இந்த வானொலி நிலையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், ஆரோக்கியம் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும்
மூத்த குடிமக்களுக்கு அனைத்து வகையான பயிற்சிகளும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.