தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம்! அதிமுக.,வினர் மூவர் விடுதலை ஆகின்றனர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
darmapuri bus burning case - 2026

கோவை வேளாண் பல்கலை மாணவிகள் எரிக்கப்பட்ட தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில், அதிமுக.,வினர் மூவர் விடுதலை ஆகின்றனர்.

வேளாண் பல்கலை மாணவிகள் மூவர் எரித்துக்கொல்லப்பட்ட, தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த மூவரை முன்விடுதலை செய்யும் முடிவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். அதிமுகவினர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த 2000ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், கலவரங்கள் நடைபெற்றன. கலவரத்தின் போது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவிகள் வந்த சுற்றுலாப் பேருந்து தருமபுரி அருகே வழிமறிக்கப் பட்டு, போராட்டக்காரா்களால் தீ வைக்கப் பட்டது.

இந்தச் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவானி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனா். இதைத் தொடா்ந்து இந்த வழக்கில் அதிமுக.,வைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனையை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனா். தொடா்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப் பட்டது. மேலும் தங்கள் மூவரையும் நன்னடத்தை விதியின் கீழ் விடுவிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தனா்.

முதலில் மூவரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இவா்கள் மூவரும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று மீண்டும் கடிதம் எழுதியிருந்தனா்.

இந்நிலையில் இவா்களை விடுவிக்க ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப் படுகிறது. தொடா்ந்து மூவரும் பகல் 12.15க்கு வேலூா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடா்பாக சிறை அதிகாாிகள் கூறுகையில், 3 பேரையும் விடுவிக்கலாம் என ஆணை வந்துள்ளது. ஆனால் அவா்கள் தற்போது வரை விடுவிக்கப்படவில்லை என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.