2019 பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை… சுஷ்மா ஸ்வராஜ் தகவல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

sushma swaraj - 2026

2019 மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். தனது விருப்பத்தை கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து விட்டதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

வரும் 2019ம் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று மத்திய அமைச்ர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். தமது உடல்நல பிரச்னை தொடர்பாக இந்த முடிவினை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தமது இந்த முடிவை கட்சியின் மேலிடத்திற்கு அனுப்பி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது உடல்நிலை கோளாறு காரணமாக தம்மால் அடுத்த தேர்தலில் போட்டியிட இயலாது என்று தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது நான் போட்டியிடுவது அல்லது போட்டியிடாதது குறித்து கட்சி தான் முடிவு செய்யும் ஆனால் அடுத்த தேர்தல்களில் மனதளவில் போட்டியிடுவது இயலாது என்று நான் தீர்மானித்திருக்கிறேன் என்று கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா நாடாளுமன்ற தொகுதியில் இவர் தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஆனால், தொகுதியில் நெடுநாட்களாக இவர் காணப்படவில்லை என்று இவர் குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த போஸ்டர்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த நேரத்தில் அவர் இந்த தகவலை தெரிவித்தார்

ஆனால் சுஷ்மா சுவராஜின் முடிவு குறித்து பாஜக தொடர்பாளர்கள் தெரிவித்தபோது அவரை மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் பாஜக ஈடுபடும். காரணம் சுஷ்மா சுவராஜ் மிகச் சிறந்த பேச்சாளர் நல்ல நாடாளுமன்றவாதி என்று கூறினர்.

சுஷ்மா ஸ்வராஜுக்கு கடந்த 2016ஆம் ஆண்டில் சிறுநீரக பிரச்சினை தொடர்பாக வெகுகாலம் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். சிகிச்சையில் இருந்த காரணத்தால் அவரால் தொகுதிக்கு வர இயலவில்லை! அப்போது அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டது… நான் இப்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். நான் இப்பொழுது டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான நிலையில் நான் இருக்கிறேன். கடவுள் கிருஷ்ணர் என்னைக் காப்பாற்றட்டும் என்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவர் பீட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.