கஜா நிவாரணம்… நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

madurai high court - 2026

கஜா புயல் நிவாரணம் தொடர்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுப்பிய நோட்டீஸில்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பால், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆட்சியர்கள் உடனடியாக செய்து தர வேண்டும்;

இந்த வசதிகள் மக்களுக்கு சென்றதா என்பதை உறுதி செய்து நாளை மறுநாள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு இட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.