
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்றுவரும் சசிகலாவுக்கு அண்மையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பதாகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இன்று அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீவிரத் தொற்று, உயர் ரத்த அழுத்தம், மூச்சவிடுவதில் சிரமம் ஆகியவை உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.