பம்பை டூ சபரிமலை… ரவுண்டு கட்டி நிற்கும் பக்தர்கள்!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன்
sabarimala devottees - 2026

பெண்களை சபரிமலையில் கொண்டு போய் நிறுத்தியே தீருவேன் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

வரும் மகர ஜோதிக்கு முன்னதாக, மேலும் பல பெண்களை சந்நிதி வாசலில் கொண்டு போய் நிறுத்தி, சபரிமலை ஆசாரங்களை குலைத்தே தீருவது என்ற முடிவுடன் பிணராயி விஜயன் திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியதால் சபரிமலை பாதுகாப்பு அமைப்பினர் பம்பை முதல் சன்னிதானம் வரை தொடர்ந்து தங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் சபரிமலைக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்ற தீர்ப்பைச் சுட்டிக் காட்டி, சபரிமலை செல்ல விரும்பாத வேற்று மத, மத நம்பிக்கையற்ற பெண்களை எல்லாம் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக செல்லச் செய்து, அதன் பெருமையை, இந்து மத நம்பிக்கையை சீர்குலைக்க கங்கனம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார் முதல்வர் பிணராயி விஜயன்.

இதனை அடுத்து பல பெண்களும் சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். ஆனால் போராட்டகாரர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களால் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் இரு பெண்கள் போராட்டகாரர்களுக்கு தெரியாமல் ஆங்கிலப் புத்தாண்டு முடிந்த கையுடன் அதிகாலையில் சந்நிதி முன் நிறுத்தப் பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் போலீஸாரின் ஏற்பாட்டில் திரும்பினர்.

இந்நிலையில், இன்னொரு பெண்ணும் போலீசாரின் உதவியுடன் சாமி தரிசனம் செய்தார் என்ற தகவல் பரவியது.

இந்நிலையில், பிணராயி விஜயன் மேலும் பல பெண்களை ஐய்யப்பன் கோவிலுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல்கள் பரவியதை அடுத்து. பக்தர்கள் பலர் பம்பை முதல் கோவில் சன்னிதானம் வரை 13 குழுக்களாக பிரிந்து தங்கி உள்ளனர். இவர்கள் மகரவிளக்கு பூஜை வரை தங்கி இருப்பார்கள் என்று கூறப் படுகிறது.

பெண்கள் அங்கு வந்தால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க போவதாகக் கூறியுள்ளனர். பஜனைகள் பாடல்கள் பாடி, பக்தர்களை ஒருங்கிணைத்து வருவதால், அந்தப் பகுதியில் தொடர்ந்து கூட்டமும் அதிகரித்தே காணப்படுகின்றது.

இந்நிலையில், இன்று மாறுவேடம் புனைந்து, வயதான கோலத்தில் மஞ்சு என்ற பெண் சுவாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோவில் சரியான தகவல் இல்லை என்றும், இது வேண்டுமென்றே கிளப்பப் படும் துர்பிரசாரம் என்றும் கூறுகின்றனர் பக்தர்கள்.

போலீஸாரும், மாறு வேடம் போட்டு சென்றதால் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.