ஸ்டாலின் நடத்திய கிராம சபைக் கூட்டம்… எடப்பாடியார் ஓவர் கிண்டல்!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20190111 WA0022 - 2026
ஸ்டாலின் கிராமசபைக் கூட்டத்தை கேலி செய்து சமூக தளங்களில் வளையவரும் மீம்ஸ்…

மு.க.ஸ்டாலின் அண்மையில் நடத்திய கிராமசபைக் கூட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார். கிராமங்களையே பார்க்காத ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என அவர் வ்மர்சித்துள்ளார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அதிமுக.,வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின் தற்போது ஊர் ஊராகச் சென்று கிராம சபை கூட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றார்.

மேலும், கிராமத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் எங்களுக்கு கிராமத்தவரின் பிரச்னையும் தெரியும், நகரத்தவரின் பிரச்னையும் தெரியும் தற்போது கிராமத்தினரின் பிரச்னையை தெரிந்து கொள்வதற்காகவே ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கொண்டிருக்கிறாரா.

ஆனால் அதிமுக அரசு பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு காரணம் திமுக.,தானே தவிர. அதிமுக., அல்ல. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படுவதால் மக்கள் மத்தியில் அதிமுக அரசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது என்று குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.

மேலும், தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தமிழகத்திற்கு நன்மை செய்யக் கூடியவர்கள் மத்தியில் ஆட்சி அமைக்கவே அதிமுக ஆதரவு அளிக்கும் என்றார் முதல்வர் பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.