
பீன்ஸ் சாதம்
தேவையான பொருட்கள் :
பிஞ்சான பீன்ஸ் – 200 கிராம்,
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து.
வறுத்து அரைக்க…
காய்ந்த மிளகாய் – 3,
துவரம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.
மேலே அலங்கரிக்க…
பொரிக்க எண்ணெய்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,
மெல்லியதாக நீளவாக்கில் சீவிய உருளைக்கிழங்கு – 1/2 கப்,
கறிவேப்பிலை – 1 கொத்து.
செய்முறை
கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்தெடுத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி பீன்ஸ், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மூடிவைத்து அடிக்கடி கிளறி விடவும். பீன்ஸ் வெந்ததும் அரைத்த பொடி தூவி, சாதம் சேர்த்து கிளறி இறக்கவும். பீன்ஸ் சாதம் ரெடி.
கடாயில் பொரிப்பதற்கு எண்ணெயை ஊற்றி சூடானதும் உருளைக் கிழங்கை போட்டு பொரித்தெடுத்து வடிய விடவும். சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகுத்தூளை கலக்கவும்.
அடுப்பை அணைத்த பிறகு எண்ணெயில் கறி வேப்பிலையை பொரித் தெடுத்து, அதனையும் உருளைக்கிழங்கில் போட்டு கலக்கவும். பீன்ஸ் சாதத்தின் மீது இந்த வறுவலையும் தூவி கலந்து பரிமாறவும்.
குறிப்பு: மொறுமொறுப்பு தேவைப்படுகிறவர்கள் சிப்ஸை ஒரு கவரில் போட்டு வைத்துக்கொண்டு பீன்ஸ் சாதம் சாப்பிடும்போது மேலேத் தூவி சாப்பிடவும்.