[wp_ad_camp_4]
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ராஜேந்திரன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக அரசின் கொறடாவாக ராஜேந்திரன் இன்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து அரியலூர் மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து சட்டமன்றத்தில் முக்கிய பதவிக்கு நியமிக்கப்படும் முதல் நபர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.



