பாவூர் சத்திரம் அடுத்த அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர் சிவானந் 496மதிப்பெண்கள் பெற்று தென்காசி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் ,மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார் ,ஆகாஷ்,சர்மியா ஆகியோர் 495மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர் ,மாணவர் வெங்கட்ராமன் 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர் அனைத்துப் பாடங்களிலும் சராசரியாக 487 மதிப்பெண்கள் அனைத்து மாணவர்களும் பெற்றுள்ளதால் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளிகளின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது ,மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ள மாணவர் சிவானந்தை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டி கேடயம் வழங்கினார்
வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர் இராஜசேகரன் ,முதல்வர் டாக்டர் மகேஸ்வரி இராஜசேகரன் துணை முதல்வர் சரளா இராமச்சந்திரன்,அக்காடமிக் அட்வைசர் இன்பசேகரன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்
அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ பள்ளி புதிய சாதனை
Popular Categories



