சாதித்துக்காட்டிய அரசுப்பள்ளி மாணவ மாணவிகள்
அர்ப்பணிப்புடன் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் 247 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 237 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளியில் 96% தேர்ச்சி பெற்று மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். முதல் மதிப்பெண் 487 ஐ வ.ராஜகீர்த்தனா என்ற மாணவி பெற்றுள்ளார். வி.மதுமித்திரா என்ற மாணவி 484 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், கே.சக்தி என்ற மாணவி 482 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடமும் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 400க்கு மேல் 85 மாணவிகளும் பெற்றுள்ளனர். சமூகஅறிவியல் பாடத்தில் 7 மாணவிகளும், அறிவியல் பாடத்தில் 2 மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவரர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரசேகரி, பெற்றோர் ஆசிரியர் குழு தலைவி தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பாவூர்சத்திரம் ஆண்கள் பள்ளி
பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 104 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இதில் 97 பேர் தேர்ச்சி பெற்றனர்.இது இந்தபள்ளியின் 93% தேர்ச்சி ஆகும். பள்ளியின் முதல் மதிப்பெண் 458-ஐ ஜீவதுரை என்ற மாணவனும், இரண்டாம் மதிப்பெண் 434-ஐ சாம்ஜெபத்துரை, வசந்தகுமார் ஆகிய இருவரும் பெற்றள்ளனர். மூன்றாம் மதிப்பெண் 426-ஐ லிங்கராஜ் என்ற மாணவனும் பெற்றுள்ளனர்.
கீழப்பாவூர்
கீழப்பாவூர் ஏ.வி உயர்நிலைப்பள்ளி யில் திலகன் என்ற மாணவன் 482 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும் ,சிவவிஷ்ணு என்ற மாணவன் 479 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் ,கார்த்திகா என்ற மாணவி 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்
மேலப்பாவூர்
மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10 வகுப்பு தேர்வில் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் முதல் மதிப்பெண் 482-ஐ ஆர்.புவனேஸ்வரி என்ற மாணவியும் 2-வது மதிப்பெண் 481-ஐ பி.மகேஸ்வரன் என்ற மாணவனனும், 3-வது மதிப்பெண் 460-ஐ டி.சுபாஷ்சந்திரபோஸ் என்ற மாணவனும் பெற்றுள்ளனர். மேலும் அறிவியலில் 2பேரும், சமூகஅறிவியலில் 1வரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 31 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களை தலைமையாசிரியை அன்புமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
பூலாங்குளம்
பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 68பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இதில் 67பேர் தேர்ச்சி பெற்றனர், இது இந்த பள்ளியில் 99% தேர்ச்சி ஆகும். முதல் மதிப்பெண் 471-ஐ ஆர்.நந்தினி, 2-வது மதிப்பெண் 464-ஐ கே.ராமர்களஞ்சியம் 3-வது மதிப்பெண் 456-ஐ வி.வேதவல்லி, ஜெ.செல்வக்குமாரும் பெற்றனர். 19பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களை தலைமையாசிரியை ஜீலியானாடெய்சிமேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.



