தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு தேர்தல் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இதற்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் வேட்பாளராக தனபாலும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை முன்னவராக ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப் பேரவை அரசு தலைமை கொறடாவாக அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
[wp_ad_camp_4]



