திருப்பதி கோவிந்தராஜ ஸ்வாமிக்கு முத்துக் கவசம் நன்கொடை!

Published:

govindarajaswami muthangi - 2026

திருப்பதி கோவிந்தராஜ சுவாமிக்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்பாத பக்தர் ஒருவர் பதினோரு லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட முத்து கவசம் ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சாமி கோவில் திருப்பதியில் உள்ளது. கோவிந்தராஜ சுவாமியின் தீவிர பக்தரான தன்னுடைய பெயர் விவரங்களை வெளியிட விரும்பாத ஒருவர் 11 லட்சம் ரூபாய் செலவில் கவசம் ஒன்றை தயார் செய்து தேவஸ்தான பெரிய ஜீயரிடம் வழங்கினார்.

அந்த பக்தர் சார்பில் பெரிய ஜீயர் இன்று இரவு முத்து கவசத்தை கோவிந்தசாமிக்கு சமர்ப்பித்தார்.

கோவிந்தராஜ சாமி கோவில் உற்சவ மூர்த்திக்கு அலங்கரிக்க தகுந்த வகையில் தயார் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img