இங்கிலாந்து பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தல்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
britain pm theresa may - 2026

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை நிராகரித்தது இங்கிலாந்து நாடாளுமன்றம். பிரதமர் தெரசா-மே பதவி விலக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரக்சிட்டை அமல்படுத்துவது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்புக்கு தோல்வி ஏற்பட்டது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக பிரிட்டன் கடந்த 2016ம் ஆண்டில் பொதுவாக்கெடுப்பு நடத்தியது.

இதில் பெரும்பாலோர் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிய ஆதரவு அளித்தனர். பிரிட்டனின் இந்த வெளியேற்ற முடிவு பிரிக்சிட் என்று அழைக்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான விதிகளை வகுக்க பிரதமர் தெரசா மே எம்பிக்களுக்கு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் பிரிக்சிட் மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் தெரசா மேவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. 432 பேர் பிரிக்சிட்டிற்கு எதிராகவும் 202 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் 230 வாக்கு வித்தியாசத்தில் பிரிக்சிட் தீர்மானம் தோல்வியடைந்தது.

பிரிட்டன் வெளியேறுவதற்கான கெடு முடிய இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தெரசா மே அரசுக்கு இத்தோல்வி கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.