சயன், மனோஜ் ஜாமீனை ரத்து செய்ய ஊட்டி நீதிமன்றம் மறுப்பு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
cyan manoj - 2026

சயன், மனோஜ் இருவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய ஊட்டி நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர்கள் இருவரும் 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

கோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாம்வல் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், சயன், மனோஜ் என இருவர் பேசினர். இதை அடுத்து எழுந்த பிரச்னையால், இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

இந்நிலையில், கோடநாடு விவகாரத்தில் இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி ஊட்டி நீதிமன்றத்தில் அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என சயன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை அடுத்து இருவரின் ஜாமினை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், வரும் 29 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று இருவருக்கும் உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.