December 5, 2025, 7:00 PM
26.7 C
Chennai

பாகுபலி பிரபாஸ் பாஜக.,வில்? ஆந்திராவில் வேட்பாளர் ஆகிறார்?!

prabhas modi - 2025

பாகுபலி படம் மூலம் பலரது நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட நடிகர் பிரபாஸ் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் நிற்க வைக்கப் படவுள்ளார். ஆந்திர அரசியல் வட்டாரத்தை கலக்கி வரும் தகவல் இதுதான்!

இன்னும் ஓரிரு மாதங்களில் 2019 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப் படவுள்ளது. இந்நிலையில், தேசிய அளவில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேசியக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் மாநிலக் கட்சிகளோ கூடுதல் தொகுதிகளைப் பெற்று, தாங்களே ஆதிக்கம் செலுத்த தயாராகி வருகின்றன.

இந்நிலையில், கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்று சிக்கல் இன்றி நாட்டை ஐந்து ஆண்டுகள் வழிநடத்திய பாஜக.,வை இம்முறை வர விடக் கூடாது என்று அனைத்து பிராந்தியக் கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன. அதற்கு பல்வேறு கற்பனையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பாஜக.,வை ஓரங்கட்ட முயன்று வருகின்றன. காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள திட்டமிட்டாலும், பொது நோக்கம் இல்லாமல் சுயநல நோக்கே மேலோங்கி இருப்பதால், காங்கிரஸுக்கு கூட்டணி இழுபறியில் இருக்கிறது!

Prabhas with Shivling in Baahubali - 2025

அதே நேரம், தாங்கள் செய்த சாதனைகளையும் ஊழல் அற்ற நேர்மையான அரசையும், ஏழைகளுக்கு மறு வாழ்வு அளித்த பாஜக.,வின் நலத்திட்டங்களைச் சொல்லியும் பாஜக., பிரசாரம் செய்து வருகிறது. அதனால் வலுவான கூட்டணி அமைத்து எதிர்க்கட்சிகளை சிதறடிக்க ஏற்பாடு செய்து வருகிறது. பாஜக.,வுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில், வேறு வகைகளில் பிரபலமானவர்களை நிறுத்தி ஆதரவைத் தேடி வருகிறது பாஜக.,

அந்த வகையில் ஜெகன் மோகன் ரெட்டியும் டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகர ராவும் கூட்டணி போட்டுவிட்டனர். காங்கிரஸ் தனித்து களம் காண்கிரது. தெலுகு தேசம் தனித்து விடப் பட்டிருக்கிறது. இந்நிலையில், தங்களுக்கும் பலம் சேர்க்க பாஜக., எடுத்துள்ள ஒரு முயற்சியாக, மாபெரும் லிங்கத்தை தூக்கிக் கொண்டு இந்துத்துவ கருத்துகள் கொண்ட பாகுபலி படத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் பிரபாஸை தங்கள் கட்சிக்கு ஆதரவாகத் திருப்ப பாஜக., முயன்று வருகிறது. ஆந்திரத்தில் சினிமா செல்வாக்கு எப்போதுமே உண்டு. பிரபாஸ் பாஜக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பட்சத்தில், அவரை ஒரு மக்களவைத் தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக முடிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஆந்திரத்தில் பாஜக.,வின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஆளும் தெலுகு தேசத்துக்கு அது மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும்!

prabhas krishnam raju - 2025

பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜு தெலுங்கு நடிகர்.இவர் 1998 தேர்தலில் பிஜேபி சார்பில் காக்கிநாடாவில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்நிலையில் பிரபாசை பாஜகவுக்கு கொண்டுவர கிருஷ்ணம் ராஜு முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது

அவருக்கு ஆளுநர் பதவியை அளிக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்! அதுபோல் பிரபாசுக்கு எம்எல்ஏ சீட் ஏதாவது கொடுக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது! ஆனால் எந்த தொகுதியில் இருந்து அவருக்கு எம்எல்ஏ சீட் கொடுப்பது என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை

கிருஷ்ணம் ராஜு வயதானவர் மற்றும் மூத்த நபர் அவருக்கு உயரிய பொறுப்பு வழங்கப்படுவது குறித்து கட்சியில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அதை ஏற்றுக் கொள்ளாமலும் இல்லை! ஆனால் பிரபாஸ் தற்போது நடிப்புத் துறையில் உச்சத்தில் இருக்கிறார் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டால் அது அவருடைய நடிப்பு தொழிலுக்கு பாதகமாக அமையும் என்று கருதப்படுவதால் இந்த வாய்ப்பை மறுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories