உலக முதலீட்டாளர் மாநாடு மாபெரும் வெற்றி: எடப்பாடி பெருமிதம்!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை வணிகம்
edappadi venkaiah naidu - 2026

2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீடுகளால் தமிழகத்தில் 50,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் ரூ.3.42 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று கூறிய முதல்வர் பழனிசாமி, நாகை மாவட்டத்தில் சி.பி.சி.எல் பெட்ரோலிய ஆலை ரூ 27400 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், 304 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, அடுத்த மாநாடு 2021ல் நடத்தப்படும் என்றும் கூறினார்.

இருநாட்களாக நடைபெற்ற “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு” -2019ன் வெற்றியாய், சுமார் 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. #TNGIM2019 இரண்டாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3,00,431 கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. #TNGIM2019 – என்று கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.27,400 கோடிக்கு சிபிசிஎல் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தானது! ரூ.23,800 கோடிக்கு என்எல்சி நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனிடையே, உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பாரத குடியரசின் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு உறுதி கூறுகிறேன். ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.