December 6, 2024, 11:33 PM
27 C
Chennai

#வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?|Sri #APNSwami #Trending

 வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?

எங்கு பார்த்தாலும் பரபரப்பு!!.. ஒரேமாதிரியான பேச்சுக்கள்…. பெரும் சலசலப்பு…. என்னதான் நடக்கிறது? என்பது தெரியாமலேயே மக்கள் பலவிதமாகப் பேச ஆரம்பித்தனர். விஷயத்தின் பொருள் நிர்மல சீதாராமன்.

நாரத முனிவருக்கும், வால்மீகிக்கும் சந்திப்பு நிகழ்ந்தது. வால்மீகி தனது மனதிலுள்ள கேள்விகளை நாரதரிடம் கேட்டார். அதாவது, ஒன்று, இரண்டு, மூன்று என்று குணங்களை வரிசைப்படுத்தி, இவைகள் தவிர ஏனைய சிறந்த குணங்களும் உடையவன் யார்? எனக் கேள்வி கேட்டார்.

அதற்கு நாரதர் ஐயையோ? இப்போதுள்ள சூழ்நிலையில், இவற்றில் ஒன்று இருப்பவனைக் காண்பதே அதிகம். அதில் அனைத்து பண்புகளும் உள்ளவனை எங்கு தேடுவது? சரி…. நானோ த்ரிலோக ஸஞ்சாரி… என்னால் இயன்றவரை பதில் கூறுகிறேன் என்றார்.

பின்னர், வேத வேதாந்தத்தின் விழுமிய பொருளான ராமனின் கல்யாண குணங்களை எடுத்துரைத்தார். அதாவது, பலமுறை ஆராய்ந்து பார்த்தும், குணங்கள், மக்களின் ஆதரவு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுதல் என பல வழிகளில் ஆராய்ந்து, பெரும்பான்மை பலத்துடன் ராமனையே தேர்ந்தெடுத்தார். சுருக்கமாக, ராமபிரான் கதையை வால்மீகி மகரிஷிக்கு எடுத்துரைத்தார்.

அத்புதமான ராமபிரானின் சரித்திரத்தைக் கேட்டதும், வால்மீகி முனிவர் மெய்சிலிர்த்தார். தனது பிறவியின் பயனை உணர்ந்தார். ராமபிரானின் திருக்கல்யாண குணங்களில் திளைத்து,  தன்னை மறந்து தொழுதார். அதன்பின்னர், நாவில் குடிகொண்ட ஸரஸ்வதியாலும், பிரமனின் அருளாலும் ராமாயணத்தை எழுதத் தொடங்கினார்.

ALSO READ:  மதுரை மாவட்ட கோயில்களில் கந்த சஷ்டி - சூரசம்ஹாரம்!

சீதா ராமனின் கல்யாணம் முடிந்து, அயோத்தியில் அவர்கள் வசித்த காலத்தை அத்புதமாக வர்ணித்தார். பின்னர் அயோத்யா காண்டத்தில் ராம பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மாமன்னன் தசரதன் தனது மைந்தனுக்கு முடிசூட நினைத்தான். ஏற்கனவே நாட்டில் அரசியல் குழப்பங்கள் சரியில்லை. இதென்ன குடியாட்சியா? அல்லது முடியாட்சியா? என மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கி விட்டனர். தசரதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதே சரியில்லையென்று ஒருசில எதிர்ப்பாளர்களும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் தனது மகன் ராமபிரானுக்கு முடிசூடுவது இயலுமா? என தசரதன் தவியாகத் தவித்தான்.

சரி… மக்களைக் கொண்டு வாக்களிக்க வைக்கலாம். மக்கள் ராமபிரானை விரும்பினால் அவர்களே பெருவாரியான வாக்களிப்பில் ராமனைத் தேர்ந்தெடுக்கட்டும் என நினைத்து, தசரதன் சபையைக் கூட்டினான்.

இந்நேர்முக வாக்கெடுப்பில் எவ்வித குளறுபடியும் நேரிடாது என நினைத்து (Exit poll) கருத்துக்கணிப்பு நடத்தினான். பூமியே அதிரும்படி அயோத்தி மக்கள் “ராமபிரானுக்கு ஜே” என்றனர். கருத்துக்கணிப்பு மகத்தான வெற்றி ஒவ்வொருத்தரும் ராமனின் குணங்களைத் தொடர்ச்சியாகப் புகழ்ந்தனர் மன்னன் மட்டற்ற மகிழ்வெய்தினான்.

ALSO READ:  நவராத்திரி திருவிழா; முப்புடாதி அம்மன் திருவீதி உலா!

ஆனாலும் ஒரு குறையுண்டு. ஒட்டுமொத்தமாகக் கருத்துக்கணிப்புகள் வெற்றி பெறுவதில்லையே! அரசன் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தனது மகனுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு வெளியிட்டான் என்று ஊ(ட)கங்கள் வம்பளக்கலாம்!

வசிஷ்டர் இங்கு ஒரு தந்திரம் செய்தார். ராமன் விஷ்ணுவைப் போன்றவன் எனும் குறியீட்டை (Hashtag) பரவச் செய்தார். அதாவது, வேதங்கள் விஷ்ணுவின் குணத்தைப் புகழ்கின்றன; அவனே ராமன் என்றால், விஷ்ணுவின் பெருமையை மறுக்க இயலாதாப்போன்றே, ராமனின் பெருமைக்கு வேறு சான்று தேவையில்லையே!!”

எனவே, வேதம் எனும் இயந்திரத்தின் துணைகொண்டு – அதாவது, வேதத்தில் உள்ள வாக்யங்கள் யாருடைய பெருமை பேசுகின்றனவோ! – அவனே பரம்பொருள்; தற்போது ராமபிரானாக அவதரித்துள்ளான்; அவனே நமது தலைவன் என்பதை நிலைநிறுத்த வசிஷ்டர் முயன்றார்.

  “பேத, அபேத வாக்யங்களில் முன்பின் முறைகேடுகள் நடக்கலாம். இதனால் வேதத்தை,  நம்பிக்கையான ஓட்டு இயந்திரமாகக் கருத முடியாது” என்ற வீணர்களின் வாதத்தை முறியடித்து, சாத்விகர்கள் அனைவரும் வேதத்தின் வழியில் ராமனையே கொண்டாடினர்.

ALSO READ:  திருப்பதி கோயில் பட்டு வஸ்திரம் சாற்றி ஸ்ரீவி., ஸ்ரீ ஆண்டாள் காட்சி!

இதற்குத் துணையாக வால்மீகியின் கேள்விகளும், ஆரண்யத்தில் மஹரிஷிகளின் ஸ்தோத்ரங்களும், தாரை, வாலி, விராதன், கபந்தன், மண்டோதரி, ராவணன் முதலானோர் வாக்கியங்களும் நிலை நின்றன.

பரமாத்மாவின் பெருமை கூறும் வேதத்தை எவராலும் தடுக்க (Hack செய்ய) முடியாது என்பதை அனைவரும் நன்கு உணர்ந்தனர். வேதத்தின் தேர்ந்தெடுப்பில் எந்த குளறுபடிகளும் நடக்க வாய்ப்பேயில்லையன்றோ! அமலன், நிமலன், நின்மலன் என்றெல்லாம் வேதத்தால் கொண்டாடப்படும் நிர்மல சீதாராமன் புகழ் என்றுமே ஜகத்தில் நிலைத்துள்ளதே!

எனவே வேதவாக்யங்களின் வாக்கெண்ணிக்கையின் அடிப்படையில் நிர்மல சீதாராமன் அயோத்திக்கு மட்டுமல்ல, அகில உலகிற்கும் அவனே காரணன் என்பதை உணரலாம். ஏனெனில் வேதத்தில் குளறுபடி நடக்கவும், குறை கூறவும் வாய்ப்புகளே இல்லையன்றோ!

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri APN Swami

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

author avatar
Nirmala Alagiamanavalan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week