மோடியின் நடவடிக்கைகளால் ஊழல் குறைந்த நாடாகி வருகிறது இந்தியா!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
- 2026

புதுதில்லி : உலக அளவில் ஊழல் நாடுகள் பட்டியலில் (180 நாடுகளில்) இந்தியா 78 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது,. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. இந்தியா 41 ஸ்கோர் எடுத்து முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக 40 மதிப்பெண்ணும், 2015ல் 38 மதிப்பெண்ணும் பெற்றிருந்தது.

உலக அளவில், ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு ஊழல் அதிகம் உள்ள 180 நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டிற்கான பட்டியல் நேற்று (ஜன.,29) வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 81 வது இடத்தில் இருந்து 78 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் சீனா 87 வது (கடந்த ஆண்டு 77 வது இடம்) இடத்திலும், பாகிஸ்தான் மாற்றம் ஏதும் இன்றி, கடந்த ஆண்டு இருந்த 117வது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் முதலிடத்தில், ஊழல் மிகக்குறைந்த நாடாக டென்மார்க் திகழ்கிறது. அடுத்த இடத்தை நியூஸிலாந்து பெற்றுள்ளது. சிரியா, சூடான் ஆகியவை கடைசி இடங்களைப் பெற்றுள்ளன.

ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளாக, மாலத்தீவு 31 வது இடத்திலும், பாகிஸ்தான் 33 வது இடத்திலும், இந்தியா 41 வது இடத்திலும் மலேசியா 47 வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.