ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மண்ணெண்ணெயை வாயில் வைத்து நெருப்பை ஊதும் அபாயகரமான சாகசம் செய்ய முயன்றவரின் முகத்தில் தீப்பிடித்தது, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கடந்த திங்கட்கிழமை ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள யெலமஞ்சிலி நகரில் உள்ள தெருவில் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் சாகசம் செய்வதைப் பார்த்து 30 வயதான சந்தோஷ் முதன்முறையாக ஸ்டண்ட் செய்ய முயன்றார். கடந்த 10 ஆம் தேதி, இந்த சம்பவத்தின் திடுக்கிடும் வீடியோ வெளியானபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் குறித்து எலமஞ்சிலி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்ட ராவ் கூறுகையில், மண்ணெண்ணெயை வாயில் வைத்து நெருப்பை ஊதும் சாகசன் என்பது திருவிழாக்களில் வழக்கமாக நிகழ்த்தப்படும்.
இந்த பழக்கம் உள்ளவர்கள் மண்ணெண்ணையை வாயில் ஊற்றி காற்றில் பறக்கவிட்டு பெரும் தீயை மூட்டுவார்கள். கடந்த நவம்பர் 8 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஊரில் நகுல சவிதி விழா நடைபெற்றது.
அப்போது, ஒரு சில கலைஞர்கள் சாகசம் செய்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த சந்தோஷ் அதை முயற்சி செய்ய விரும்பினார். ஆனால், அவர் அதை செயல்படுத்த முயன்றபோது, அவரது உடலில் மண்ணெண்ணெய் பட்டு, இதனால் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்தால் காயமடைந்த அவர், விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் இல்லை’ கூறினார்.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி வெளியானது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Freak accident caught on camera in Visakhapatnam. 30-year-old Santosh suffered burn injuries after he tried to perform a stunt he had seen earlier. He is now under treatment in KGH hospital. #AndhraPradesh
— Paul Oommen (@Paul_Oommen) November 10, 2021
Trigger warning- Graphic visuals pic.twitter.com/EqQsGYg0SJ