ஒசாமாவை அமெரிக்கா கொன்றது போல்… இந்தியாவும் செயல்பட முடியும்!

இந்தியா சற்றுமுன்

arun jaitley - 2026

ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும்  என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி!

தற்போது பாகிஸ்தான், இந்தியா இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,

பாகிஸ்தானுக்குள் புகுந்து, ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும் என்று கூறினார்!

மேலும், அமெரிக்கா போலவே இந்தியாவும் பாகிஸ்தானுக்குள் புகுந்து குறிப்பிட்ட இலக்கு நோக்கி தாக்குதல் நடத்த முடியும் என்று கூறிய அவர், இந்தியாவால் இனியும் பொறுத்திருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

அமெரிக்க வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனைக் கொன்றது போல் தற்போதைய சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் அருண் ஜேட்லி. ஒட்டுமொத்த நாடும் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. உரிய நேரத்தில் எதுவும் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறிய அருண் ஜேட்லி,  எல்லையில் கடுமையான பதற்றம் நீடித்து வருகிறது என்றார்.

அமெரிக்கா போல பாகிஸ்தானுக்கு உள்ளே சென்று தாக்க இந்தியா தயார், எதற்கும் தயங்காது  என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டது, போருக்கான கட்டாயச் சூழலை வெளி உலகுக்கு உணர்த்தியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.