வைகோ.,வுடன் சென்ற புண்ணியம்! 404 பேர் மீது வழக்குகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

vaiko in van - 2026

மதிமுக., பொதுச் செயலர் வைகோ., வுடன் சென்ற புண்ணியத்துக்கு 404 பேர் இப்போது வழக்க்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை காவல்கிணறில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

அப்போது பாஜக., தொண்டர்களுக்கும் மதிமுக., தொண்டர்களுக்கும் இடையே கைகலபு மூண்டது. கல்வீச்சு, செருப்பு வீச்சு என்று பதற்றம் ஏற்பட்டது.

காவல் துறையினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ, கறுப்புக்கொடி ,கருப்பு பலூன்களை விடுதல் என்று எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டு காவல் வாகனங்களில் ஏற்றப் பட்டனர்.

இந்நிலையில், இன்று வைகோ உள்பட 404பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்துள்ளனர் போலீஸார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.