
இரண்டாம் வகுப்பு மாணவன் 3மணி நேரத்தில் 82கிலோ மீட்டா் சைக்கிள் ஓட்டி சாதனை..!
கோவையை சேர்ந்த கோபால்சாமி என்பவரது மகன் அபினவ் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் இவன் புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டிலிருந்து மாமல்லபுரம் வரையிலான 82 கிமீ தொலைவை சைக்கிள் மூலம் நிறுத்தாமல் சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளான்.
அதிகாலை 4.30 மணிக்கு சைக்கிள் பயணத்தை துவக்கிய சிறுவன் அபினவ், இடையில் எங்யேுமே நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்து காலை 8.20 மணிக்கு மாமல்லபுரத்தை அடைந்தான்.
நான் ஸ்டாப்பாக இடையில் எங்கேயும் சைக்கிளை நிறுத்தாமல், சுமார் 3 மணிநேரம் 40 நிமிடங்களில் இந்த 82 கி.மீ தொலைவை அச்சிறுவன் கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளான். இது குறித்து மாணவன் அபிநனவ் கூறும்போது.
தொடர் பயிற்சியின் மூலமே இந்த சாதனை சாத்தியமானதாக கூறியுள்ளான். மேலும் தனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் ஊக்கமளித்து உற்சாகப்படுத்துவதாகவும் கூறினான்.
இச்சாதனையை படைத்த சிறுவனுக்கு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு என்ற நிறுவனங்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்துள்ளது



