அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு பக்கா ஏமாற்றுப் பேர்வழி: சொல்பவர் அவரின் குருநாதர் அன்னா ஹசாரே!

Published:

06 July30 Anna Hazare - 2026

பணம் மற்றும் பதவிக்காக மக்களை ஏமாற்றுகிறார் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது அவரின் குருநாதர் அன்னா ஹசாரே குற்றம் சாட்டியுள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கூறுகையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார்.

பணம் மற்றும் பதவிக்காக மக்களை ஏமாற்றி வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். அவர் இப்போது முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார். அரசியலிலும் சமூகத்திலும் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை முக்கியமானது. அரசியல் இதனை மாற்றி அமைக்கும்.

அரவிந்த் கேஜ்ரிவாலும் மாறி விட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஏமாற்றிவிட்டார். அவர் காங்கிரஸ் கட்சியுடன் நட்பை உருவாக்கிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகிறார். எனக் கூறியுள்ளார்.

மேற்கு தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பல்பிர் சிங் ஜாக்கரிடம் இருந்து, அரவிந்த் கேஜ்ரிவால் ரூ.6 கோடி பெற்றதாக அவரின் மகன் உதய் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், தனது அரசியல் எதிர்காலம் கருதி, தனது மகன் பொய் சொல்வதாக ஆம் ஆத்மி வேட்பாளர் கூறியிருந்தார்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

Related articles

Recent articles

spot_img