பாரிவேந்தர் உள்ளே… வைகோ., திருமா., வெளியே!

சற்றுமுன் சென்னை

anna arivalayam - 2026

திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று 2 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில், நடைபெற்று வருகிறது.

முன்னதாக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில், இன்று தோழமைக் கட்சிகளுடன் பேச திமுக அழைப்பு விடுத்திருந்தது. ஏற்கெனவே அமர்ந்து பேசிய மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து திமுக., பேசும் என்று காலையில் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், இன்று காலை திடீரென்று, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக
பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்திய ஜனநாயகக் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்தது. இதை அடுத்து, அக்கட்சியின் நிறுவுனர் பாரிவேந்தர் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார்.

இதனால், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது என திமுக தரப்பில் தகவல் வெளியானது. இதனால் மதிமுக., வைகோ.,வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.