மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஐஜேகே தலைவர் பாரிவேந்தர்

Published:

ijk - 2026

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவுனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்துக்கு இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவுனர் பாரிவேந்தர் இன்று காலை வந்திருந்தார். திமுக.,வுடன் ஐஜேகே கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்று கூறப் படுகிறது.

திமுக., அழைப்பின் பேரில் அவர் அண்ணா அறிவாலயம் வந்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில் இன்று காலை தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் ஐஜேகே குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்! ரவி பச்சைமுத்துவும் அவருடன் வந்திருக்கிறார்கள்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை உறுதியாகியுள்ள நிலையில், தேர்தலை திமுக.,வுடன் இணைந்து ஐஜேகே சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img