பாஜக., கூட்டணியில் புதிய தமிழகம்! தென்காசியில் போட்டி!

Published:

dr krishnasamy ops - 2026

புதிய தமிழகம் கட்சி பாஜக., கூட்டணியில் இணைந்துள்ளது. அது ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.

தமிழகத்தில் அதிமுக., தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள புதிய தமிழகம் கட்சி, தென்காசியில் போட்டியிடுகிறது! இதனை அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.

மேலும், புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி! இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம், புதிய தமிழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தென்காசியில் போட்டியிடுகிறது என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியல் சமுதாயத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் கிருஷ்ணசாமி. அதனை மதுரையில் நடைபெற்ற கூட்டத்திலும் பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசி, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இதை அடுத்து தமிழக அரசு இதற்காக ஒரு குழு அமைதுள்ளது. இந்நிலையில், தே.ஜ.கூட்டணியில் இணைந்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img