shock
shock

திண்டுக்கல்லை சேர்ந்தவர் ரஞ்சித், 24; இவரது மனைவி பச்சையம்மாள், 21. சக்திதேவி (எட்டு மாதம்) என்ற மகள் உள்ளார்.

ரஞ்சித், காங்கயம் சிவன்மலை பகுதியில் ஒரு தேங்காய் களத்தில் வேலை செய்கிறார். அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கின்றனர்.நேற்று காலை 7:00 மணியளவில் ரஞ்சித் தேங்காய் களத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

பச்சயைம்மாள் வீட்டினுள் சமைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்த குழந்தை சக்திதேவி, கீழே கிடந்த மின்சார ஜங்சன் பாக்சை பிடித்து இழுத்தது. எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி குழந்தை அதே இடத்தில் உயிரிழந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending