காஷ்மீரில் இயங்கி வரும் ஜமாத்-இ-இஸ்லாமிக்கு தடை! மத்திய அரசு அதிரடி!

இந்தியா சற்றுமுன்

jamaat - 2026ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வந்த ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. அந் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப் பட்டது. தொடர்ந்து அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வந்த ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாகவும், அந்த அமைப்பு இயங்க தடை விதிக்கப் படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

jamaat3 - 2026

இதற்கான அறிவிக்கை, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் மட்டக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் தெரிவிக்கப் பட்டது.

ஜமாத் இ இஸ்லாமி ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஜம்மு காஷ்மீரில் அந்த அமைப்பின் அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த இயக்கத்தின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்த அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்களும் தற்போது கைதாகி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.