இன்று… இந்தியாவின் மிகப் பிரபலமான வாசகம் எது தெரியுமா?

இந்தியா சற்றுமுன் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்

abhinandan message usedbypolice - 2026

ஐயம் நாட் சப்போஸ்ட் டு டெல் யு திஸ்… இதைத்தான் இன்று பலரும் சொல்லி
வருகின்றார்கள். இது தற்போது மிகப்  பிரபலமான வாசகமாக மாறி வருகிறது.

பலரும் தங்களுக்குப் பிடித்த வாசகமாகவும் அதே நேரம், மிகவும் தேவையான வாசகம் என்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

வங்கியில் இருந்து பேசுகிறேன், பேங்க் மேனேஜர் பேசுறேன் என்று யாராவது உங்களிடம் பேசி, உங்க மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் என்று கேட்டால்.. நீங்கள் இதைத்தான் சொல்லவேண்டும்… ஐயம் நாட் சப்போஸ்ட் டு டெல் யு திஸ்… இதற்கு மேல் நான் உங்களிடம் எதுவும் சொல்ல இயலாது என்பதைத்தான்!

இப்போது, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரி போலீஸார் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த வாசகத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

யாராவது உங்களிடம் ஒன் டைம் பாஸ்வர்ட் கேட்டால் நீங்கள் சொல்ல வேண்டியது… ஐயம் நான் சப்போஸ்ட் டூ டெல் யு திஸ்..!

அபிநந்தன் உங்களை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம். திறமைக்கு முன் தலைவணங்குகிறோம். உங்கள் வீரத்துக்கு முன் வேறு எதுவும் இல்லை. பெருமையையும் அன்பையும் சேர்த்துவைத்திருக்கிறிர்கள். காரணம் நாங்கள் இதை உங்களிடம் சொல்ல வேண்டும்! வி ஆர் சப்போஸ்ட் டு டெல் யு திஸ்! – என்று வீரேந்திர சேவாக் செய்துள்ள பதிவு மேலும் பலரின் கண்களைக் குளமாக்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.