அபிநந்தனை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Published:

nirmala sitharaman abinandan - 2026

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் சனிக்கிழமை இன்று மருத்துவமனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரை சந்தித்து நலம் விசாரித்தார்

இந்திய விமானப் படை  விமானி அபிநந்தன், தான் பாகிஸ்தானில் இருந்த 60 மணி நேரத்தில் நடந்தவற்றை நிர்மலா சீதாராமனிடம் விளக்கிக் கூறினார்

பாகிஸ்தானிலிருந்து அட்டாரி வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை நேற்று இரவு அபிநந்தன் என்ற இந்திய விமானப்படை விமானி  இந்தியாவுக்கு திரும்பினார். பின்னர் அவர் உடனடியாக தில்லியில் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

முன்னதாக இன்று காலை அபிநந்தனை அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு மூத்த அதிகாரிகள் சந்தித்து பேசினர். இந்திய விமானப்படை அதிகாரிகள் அவருடன் இன்று காலை பேசிக்கொண்டிருந்தனர்

நேற்று இரவு 11 45 மணி அளவில் அவர் தில்லிக்கு திரும்பினார்! பின்னர் அவர் ஏர்போர்ஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்டாப்ளிஷ்மெண்ட் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

நிர்மலா சீதாராமன் நேற்று இரவு அபிநந்தனுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டிருந்தார்! அதில் அவர் ஜெய்ஹிந்த்! விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான்,  உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் ஒட்டுமொத்த நாடும் உங்களது வீரத்திற்கும் தியாகத்திற்கும் பாராட்டுகிறது ! கடினமான சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் பொறுமையாகவும் நிதானமாகவும் கையாண்ட விதம் இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது வந்தேமாதரம் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்

இதன் பின்னர் இன்று காலை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!

A day after Wing Commander Abhinandan Varthaman returned to India, Defence Minister Nirmala Sitharaman on Saturday met him at RR hospital in Delhi. The Indian Air Force pilot is understood to have explained Sitharaman the details about his nearly 60-hour stay in Pakistan

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img