விடாப்பிடியாக… விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை பேச வாய்ப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

anna arivalayam - 2026

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் நாளை மீண்டும் பேச வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக திமுக., தரப்பு கூறியுள்ளது.

நாளை காலை 11 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மற்ற தோழமைக் கட்சிகளையும் அழைத்து பேச வாய்ப்பு.. உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை வி.சி.க., ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி உடன்பாடு கையெழுத்தாக உள்ளதாகக் கூறப் படுகிறது. நாளை காலை 11 மணிக்கு அறிவாலயம் வருமாறு விசிக தலைவர் திருமாவளவனுக்கு தி.மு.க தரப்பில் இருந்து அழைப்பு  விடுக்கப் பட்டுள்ளது.

திருமாவளவனை தொடர்ந்து வைகோவும் அறிவாலயம் சென்று தொகுதி உடன்பாடு செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின், இரு கட்சிகளுடனும் திமுக., தொகுதி உடன்பாடு செய்து கொள்ளும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.