லைவ்… ‘வழக்கம்போல்’ அர்னாப்! கூலாக பொங்கல் சாப்பிட்ட கஸ்தூரி! (Viral Video)

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

லைவ் உரையாடல் போது லஞ்ச் செய்தபடி தென்பட்ட நடிகை கஸ்தூரியின் வைரல் வீடியோ...

கொரோனா காரணமாக செலிபிரிடிகள் வீடுகளில் இருந்தே பல சேனல்களுக்கு இன்டர்வியூ அளித்து வருகிறார்கள்.

அதுபோல் திரைப்பட நடிகை கஸ்தூரி சங்கர் அண்மையில் ரிபப்ளிக் சேனல் ஹோஸ்ட் அர்னாப் கோஸ்வாமி தயாரித்த நேரடி விவாதத்தில் பங்கு கொண்டார். ஆனால் அதில் ஆர்நாப் பேசுகின்றபோது லைவ்வில் நடிகை கஸ்தூரி மதிய உணவு உண்ட படி காணப்பட்டார்.

லைவ்வில் விவாதம் தொடர்பாக அர்னாப் சத்தமாக பேசிக்கொண்டு இருந்த போது மிகவும் நிதானமாக போஜனம் செய்தபடி கஸ்தூரி தென்பட்டது வைரலாக மாறியது.

இந்த வீடியோவை ஒரு நெட்டிசன் சோஷல் மீடியாவில் போஸ்ட் செய்து இந்த பெண்ணிற்கு உள்ள கான்பிடன்ஸ் பாராட்டத்தக்கது என்று காமென்ட் போட்டார். அந்த வீடியோ சோஷல் மீடியாவில் வைரலாக மாறியது.

அதுகுறித்து கஸ்தூரி பேசுகையில் கான்ஃபிடென்சுக்காக நான் அந்த செயலை செய்யவில்லை. அர்னாப் பதில் அளிப்பதை நான் 60 நிமிடங்கள் கவனித்தேன். அவர் எனக்கு பேசும் அவகாசமே தரவில்லை. அதனால் நான் லஞ்ச் சாப்பிட்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் ஸ்கைப் ஆஃப் செய்வதற்கு மறந்துவிட்டேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். இது யாரையும் குறைத்து மதிப்பிடும் செயலல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன சாப்பிடுகிறீர்கள் என்று நெட்டிசன்கள் கேட்டதற்கு பொங்கல் சாப்பிடுவதாக கஸ்தூரி பதிலளித்துள்ளார்.

கஸ்தூரி சினிமா விஷயங்களுக்கு வந்தால்… 90களில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக நடிகை கஸ்தூரி சங்கர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேலாக படங்களில் நடித்துள்ளார். தமிழ் பிக்பாஸில் பங்கு பெற்றார். தற்போது தெலுங்கு மா டிவியில் ஒளிபரப்பாகும் கிரகலட்சுமி என்ற சீரியலில் ஒரு லீடிங் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.