திடீர் திருப்பம்!.. இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்! – பிக்பாஸ் அப்டேட்..

சினி நியூஸ் சினிமா

 பிக்பாஸ் அப்டேட்தற்போது பிக்பாஸ் சீசன் 4 நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் வந்து வீட்டின் பஞ்சாயத்துக்களை தீர்த்து வைக்கிறார். நன்றாக விளையாடிய போட்டியாளரை பாராட்டியும் வருகிறார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஆரியுடன் எல்லோரும் சண்டை போடுகின்றனர். அவர் மிகவும் நியாயமாக பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை. ஒருபக்கம் பாலாஜி சனம் ஷெட்டியுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறார். அழகி பட்டம் பெற்றது பற்றி தன்னை பாலாஜி தவறாக விமர்சித்ததாக சனம் ஷெட்டி புகார் கூறியிருந்தார்.

a58250f1b53e05d1175a7bd6d8c50910 - 2026

இந்நிலையில், இந்த வாரம் பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்படவுள்ளார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், அவர் அதிக ஓட்டு வாங்கியிருப்பதால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டாலும் அவர் வெளியாகப்போவதில்லை எனவும், அவருக்கு பதில் சுரேஷ் வெளியேற்றப்படவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.

ஏனெனில், அவர் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் அவர்தான் வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.