சுபாஷிதம்: முயற்சியின்றி பலனில்லை!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

28. முயற்சியின்றி பலனில்லை!

ஸ்லோகம்:

உத்யமேன ஹி சித்யந்தி கார்யாணி ந மனோரதை: |
ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிசந்தி முகே ம்ருகா: ||

— ஹிதோபதேசம் 1-36

பொருள்:

நாம் நினைத்த செயல்களையும் சாதிக்க நினைத்த இலக்குகளையும் கடின முயற்சியால் மட்டுமே அடைய முடியும். மனதில் நினைத்தால் மட்டுமே நடந்து விடாது. சிங்கம் தன் குகையில் படுத்துக் கொண்டிருந்தால் விலங்குகள் தாமாகவே வந்து அதன் வாயில் விழாது அல்லவா?

விளக்கம்:

வாழ்க்கைக்கு ஒரு இலக்கு வேண்டும். அந்த இலக்கை அடைய உழைக்க வேண்டும். அப்போதுதான் மனதில் நினைத்தது நிறைவேறும். வெறும் பகற்கனவால் பலனில்லை. கனவை நனவாக்குவதற்கு தேவையான எரிபொருள் உழைப்பு. அதாவது சக்தி அனைத்தையும் திரட்டிச் செய்ய வேண்டிய விடாமுயற்சி. அத்தகைய முயற்சியின் தேவையைக் கூறுவதே இந்த ஸ்லோகம். சிங்கத்தை போல் வீரமும் சாமர்த்தியம் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை உபயோகிப்பதும் முக்கியமானது என்பது இந்த ஸ்லோகம் அளிக்கும் மற்றுமொரு செய்தி.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

லட்சியம் சிறியதானாலும் பெரியதானாலும் அதற்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கனவு நிறைவேறும். சிங்கம் எத்தனை வலிமை பொருந்தியது ஆனாலும் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்கு குகையில் இருந்து வெளிவரவேண்டும். ஓட வேண்டும். மானை விட வேகமாக ஓடினால்தான் அதற்கு வயிறு நிறையும்.

கனவு காணவும் வேண்டும். அது நிறைவேறுவதற்காக முயற்சித்து உழைக்கவும் வேண்டும். ஒரு மாணவன் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டால் போதுமா? அதற்கான போட்டித் தேர்வு எழுத வேண்டும். வெற்றி பெற வேண்டும். அதற்காக ஓய்வின்றி படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நான் டாக்டராவேன் என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் நடக்காது அல்லவா?

வாழ்க்கை கனவுகள் என்றால் நமக்கு உறக்கத்தில் வரும் கனவுகள் அல்ல. நம்மை உறங்க விடாமல் செய்யும் கனவுகள்” என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம். இந்த ஸ்லோகம் கூறும் கருத்தும் இதுவே.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img