mp
mp

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மழை வேண்டி 6 சிறுமிகள் நிர்வாணமாக ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவாட்டத்தில் அமைந்துள்ள பனியா கிராமத்தில் மழை பொய்த்துப் போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..

இதனால், அவர்களின் ஊர் நம்பிக்கையின் படி 6 சிறுமிகளை நிர்வாணமாக ஒரு மரத் தண்டுடன் தோள்பட்டை மீது தவளையைக் கட்டிக்கொண்டு ஊர் முழுக்க நடக்கச் செய்துள்ளனர். முன்னால் செல்லும் சிறுமியை பின் தொடர்ந்து வரும் சிறுமிகள் மழை கடவுளைப் புகழ்ந்து பஜனை பாடிய படி நிர்வாணமாக தங்கள் தோள்களில் பூச்சிகளைச் சுமந்து அவர்களை நடக்க வைத்துள்ளனர்.

மேலும், உள்ளூர் வழக்கப்படி அந்த சிறுமிகள் மாவு, பருப்பு வகைகள் மற்றும் பிரதான உணவு தானியங்களை கேட்டு வீடு வீடாகவும் சென்று உணவு தானியங்களை சேகரித்தனர்.

பின்னர், சேகரிக்கப்பட்ட பொருட்களை கிராம கோவிலுக்கு முன் அமைக்கப்பட்ட சமுதாய சமையலறைக்கு அவர்கள் நிர்வானமாக வந்து வழங்க வேண்டும்.. அவர்கள், அப்படி வழங்கும் போது அனைத்து கிராமவாசிகளும் அங்கு இருப்பது கட்டாயமாகும். இந்த ‘சடங்கு’ கிராமத்திற்கு போதிய மழையைத் தருகிறது மற்றும் வறட்சியைத் போக்கும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

தமோ மாவட்ட தலைமையகத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள ஜபேரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பனியா கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது.
இந்தச் சம்பவம் குறித்து இரண்டு வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மத்தியப் பிரதேச போலீஸாருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

தற்பொழுது, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. இது குறித்து, தமோ மாவட்ட ஆட்சியர், “இது வரை எந்தப் புகாரும் கிராமத்திலிருந்து எங்களுக்கு வரவில்லை.. இருப்பினும் வீடியோக்களின் அடிப்படையில் தான் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.

சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்;

தாமோவின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஆர்.டெனிவர் கூறுகையில்; கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் இப்பகுதியை மழையின் காரணமாக குழந்தைகளின் ஒப்புதலுடன் தான் இதை பின்பற்றுகிறார்கள்.

இந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கிராமத்தில் நிர்வாணமாக பிச்சையெடுக்கும் பெண்களை தயார் செய்கிறார்கள் என்று டெனிவர் கூறினார். எவ்வாறாயினும், எந்தவொரு குழந்தையும் இந்த செயலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதா என்பதை அறிய போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

இது கட்டாய நடைமுறை என்று கண்டறியப்பட்டால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெனிவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending