காட்டிற்கு காதலியை‌ அழைத்துச் சென்று கண்டதுண்டம் செய்த காதலன்!

Published:

vinay rai
vinay rai

மகாராஷ்ட்ரா மாநிலம் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்ட்ரா மாநிலம் நந்துபார் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆகஸ்ட் 24-ம் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தை போலீஸார் பார்வையிட்டபோது இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இந்த கொலையானது அவசர கதியில் நடந்ததாக இல்லை இளம்பெண்ணை இந்த பகுதிக்கு குற்றவாளிகள் திட்டமிட்டு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

இளம்பெண் கழுத்தறுப்பட்டு நிலையில் சடலமாக இருந்தார். அவரது கை, கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக பெண்ணை முகத்தை கற்களைக் கொண்டு சிதைக்கப்பட்டிருந்தது.

முகத்தில் இருந்த தோலை பிளேடால் அகற்றியுள்ளனர். இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது காட்டுப்பகுதி என்பதால் போலீஸாருக்கு இந்த வழக்கு சிக்கலாக இருந்தது. இருப்பினும் பல சவால்களான வழக்குகளை பார்த்த போலீஸார் இந்த வழக்கிலும் குற்றவாளியை கைது செய்தனர்.

இளம்பெண் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டதால் முதலில் அந்த பகுதியில் இருந்த செல்போன் டவர்களை ஆராய்ந்த போலீஸார் அவர்களுக்கு கிடைத்த சிக்னல்கள் அடிப்படையில் விசாரணையில் இறங்கினர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மேலும் அந்தப்பெண் அணிந்திருந்த ஆடையை கொண்டு இந்த பகுதிக்கு வரும் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இளம்பெண் சடலத்தில் இருந்த ஆடையின் நிறத்தில் ஒரு பெண் இளைஞருடன் செல்லும் காட்சிகள் ரயில்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து அந்த இளைஞர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரிக்க தொடங்கினர். கொலையான பெண்ணும் அந்த இளைஞரும் சூரத் பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விவரம் காவல்துறைக்கு கிடைத்தது. இதனையடுத்து இந்த தகவல்கள் சூரத் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சூரத் விரைந்த போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து பேசிய போலீஸார், ” இளம்பெண் மரணத்தில் கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் வினய் ராய் (வயது 38) சூரத் பகுதியை சேர்ந்தவர். இங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் பீகாரை சேர்ந்த சீதா பகத் ( வயது22) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு திருமணமானதை மறைந்த அந்தப்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். அவ்வப்போது தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த 10 நாள்களுக்கு முன்பாக சீதாவை சூரத்துக்கு அழைத்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி சீதா கட்டாயப்படுத்தியுள்ளார்.

வினய் ராய் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இப்போது ஏன் அவசரம் எனக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீதா என்னை இதற்கு முன்பு ஒருவன் காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்தான். நான் அவன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தேன்.

நீயும் என்னை ஏமாற்றலாம் என நினைத்தால் உன் மீதும் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து கம்பி எண்ண வைத்துவிடுவேன்.
என்னை திருமணம் செய்துக்கொள்ளும் வழியைப்பார் என மிரட்டியுள்ளார்.

இதைக்கேட்டு வினய் ராய் அதிர்ச்சியடைந்துள்ளார்.இவளை திருமணம் செய்யாமல் அப்படியே விலகினால் நம்மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துவிடுவாள். அதன்பின் குடும்பத்தினர் மத்தியில் மானமே போய்விடும் சீதாவை தீர்த்து கட்டுவதுதான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என வினய் ராய் எண்ணியுள்ளார்.

இதனையடுத்து சீதாவிடம் ஆசையாய பேசி மகாராஷ்ட்ராவுக்கு அழைத்து வந்துள்ளார். அவரை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் எல்லாம் சென்று வேண்டியதை வாங்கிக்கொடுத்துள்ளார். அதன்பின்னர் நந்துபார்க்கு இருவரும் ரயில் ஏறியுள்ளனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

நந்துபார் ரயில் நிலையத்துக்கு ஒரு ஸ்டாப் முன்னாடியே இருவரும் இறங்கியுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தில் இருவரும் நடந்து வந்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள காட்டுப்பகுதிக்கு சீதாவை அழைத்து சென்ற வினய் ராய் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக உடல் பாகங்களை வெட்டி வீசியுள்ளார். கற்களை கொண்டு முகத்தையும் சிதைத்துள்ளார். அங்கிருந்து அடிபம்பில் கைகளை கழுவிக்கொண்டு அங்கிருந்து ரயில் ஏறி சூரத் திரும்பி இங்கு வழக்கம் போல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். போலீஸ் வீட்டுக்கு வந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img