மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம்! பொருத்தமானது என கமல் நன்றி!

சற்றுமுன் சென்னை தமிழகம்

10 June24 Makkal kamal - 2026

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்! இதற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத 39 கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி டார்ச் சின்னத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்கியது மிகவும் பொருத்தமானது என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன், இதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி கூறிக் கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மற்றும் இந்திய அரசியலில் புது யுகம் படைக்கும் இலக்கை அடைய சுடரை ஏந்திச் செல்வோம் என்றும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

makkalneethimayam - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.