அதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
admk executive meeting1 - 2026
File Picture

அதிமுக, மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப் பட்டன. முன்னதாக, இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் வந்தனர்.

தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடன் இருக்க, அதிமுக., தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, அதிமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு பட்டியலில்…

admkalliance - 2026

அதிமுக-20:

1,தென்சென்னை,
2, காஞ்சீபுரம் (தனி),
3, திருவண்ணாமலை (தனி),
4, சேலம்,
5, நாமக்கல்,
6, ஈரோடு,
7, திருப்பூர்,
8, நீலகிரி (தனி),
9, பொள்ளாச்சி,
10, கிருஷ்ணகிரி,
11, ஆரணி,
12, கரூர்,
13, பெரம்பலூர்,
14, சிதம்பரம் (தனி),
15, நாகப்பட்டினம் (தனி),
16, மயிலாடுதுறை,
17, மதுரை,
18, தேனி,
19, திருவள்ளூர்
20, திருநெல்வேலி.

பாமக-7

21, மத்திய சென்னை,
22, ஸ்ரீபெரும்புதூர்,
23, அரக்கோணம்,
24, தர்மபுரி,
25, திண்டுக்கல்,
26, விழுப்புரம் (தனி),
27, கடலூர்.

பாஜக-5

28, கோயம்புத்தூர்,
29, சிவகங்கை,
30, ராமநாதபுரம்,
31, தூத்துக்குடி,
32, கன்னியாகுமரி

தேமுதிக-4

33, வடசென்னை,
34, கள்ளக்குறிச்சி,
35, திருச்சி,
36, விருதுநகர்.

என்.ஆர்.காங்கிரஸ் – 1

37, புதுச்சேரி.

த.மா.கா-1

38, தஞ்சாவூர்

புதிய தமிழகம் – 1

39, தென்காசி.

புதிய நீதிக்கட்சி – 1

40, வேலூர். – ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இவற்றில், தென்சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.  #DMK | #AIADMK | #DMKAlliance | #AIADMKAlliance

அடுத்து, தருமபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் திமுக, பாமக நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியுடன் நேரடியாக போட்டியிடுகிறது பாமக!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.