நிரந்தர கீர்த்தி: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும்.

நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும், பலர் நிந்தனை செய்ய வரலாம் அல்லது அவனுக்கு ஐஸ்வர்ய நஷ்டமும், உயிருக்கு ஆபத்தும் கூட வரலாம்.

ஆனால் எல்லாவற்றையும் விட நியாயமும் சத்தியமும்தான் உயர்ந்தது என்கிற பாவத்தோடு, எடுத்துக்கொண்ட காரியத்தை செய்து முடிக்க வேண்டும்.

கஷ்டங்கள் வரலாம் என்ற காரணத்திற்காக சில மனிதர்கள் எந்த நல்ல காரியத்தையும் ஆரம்பிக்ககூட மாட்டார்கள்.

மற்ற சிலர் எடுத்த காரியத்தில் கஷ்டங்களைப் பார்த்து நடுவில் அதை கைவிட்டு விடுவார்கள். ஆனால் உத்தமமான மனிதர்கள் எந்த கஷ்டங்கள் வந்தாலும் எடுத்துக் கொண்ட அந்த நற்பணியை முடித்துவிடுவார்கள்.

பகவத்பாத சங்கரர் தர்மபிரசார காரியத்தை எடுத்துக் கொண்டார். அதில் எத்தனையோ கஷ்டங்கள் வந்தன. அந்த மாதிரி சமயத்தில் மனிதனுக்கு தைரியம் மிகவும் தேவையானது.

பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று வகைப்பட்ட தைரியத்தை பற்றி சொல்கிறார்- ஸாத்விகம், ராஜஸம், தாமஸம். காரியங்களைச் செய்யும் பொழுது ஏற்படக்கூடிய கஷ்டத்தை சகிப்பது தான் ஸாத்விகமான தைரியம். அதுதான் மிகவும் தேவையானது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இந்த தைரியத்துடன் காரியத்தை நிறைவேற்றிய மனிதன் எத்தனையோ மனிதர்களுக்கு உபகாரம் செய்தவனாவான். அவனுடைய பெயர் நீண்டகாலம் நிலைக்கும்.

மகாகவி பாரவி ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்
ஸாஸ்வதமற்ற விலாசத்தை கவனிக்காமல் சாஸ்வதமான கீர்த்தியில் விருப்பம் உள்ளவர்களுக்கு லௌகீகமான சம்பத் என்கிறது ஒரு விஷயமே இல்லை.

என்ன கஷ்டங்களிலும் எடுத்துக்கொண்ட நல்ல காரியத்தை செய்து முடித்து, சாஸ்வதமான கீர்த்தியை சம்பாதிக்க வேண்டும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories