மோடியின் ஆட்சியில் விலைவாசி பாதியளவுக்கும் குறைவே!

அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

modi superb - 2026

சேலம் செவ்வாய்ப்பேட்டை மளிகை அண்டு ஷாப் வர்த்தக நல சங்கம் சார்பில் தலைவர் எஸ் நடராஜன் என்பவர் கையெழுத்திட்டு ஒரு சுற்றறிக்கை பரவலாக வலம் வந்து கொண்டிருக்கிறது

இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் விலை விபரம் என்று ஒரு பட்டியலை போட்டிருக்கிறார்கள்!

பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்த போது கீழ்க்காணும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலைகள் இருந்தன!

price list - 2026

பொருட்களின் விவரம்

துவரம் பருப்பு ஒரு கிலோ 150 ரூபாய் தற்போது 70 முதல் 90 ரூபாய்
உளுத்தம் பருப்பு ஒரு கிலோ 150 ரூபாய் தற்போது 70 முதல் 100 ரூபாய்
பாசிப் பருப்பு ஒரு கிலோ 160 ரூபாய் தற்போது 75 முதல் 90 ரூபாய்
கடலை பருப்பு ஒரு கிலோ 160 ரூபாய் தற்போது 75 முதல் 80 ரூபாய்
பொட்டுக்கடலை ஒரு கிலோ 150 ரூபாய் தற்போது 75 முதல் 85 ரூபாய்
கடலை மாவு ஒரு கிலோ 150 ரூபாய் தற்போது 75 முதல் 90 ரூபாய்

இதேபோல அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலை மிகவும் குறைந்துதான் இருக்கிறது! கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக விலைவாசிகள் ஏறாமல் கட்டுக்குள் உள்ளன! இதற்கு காரணம் மத்திய அரசின் சிறப்பான ஆட்சியும் முக்கிய காரணம் என்பதை நாங்கள் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கையெழுத்திட்டு இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்கள்

இந்த சுற்றறிக்கையை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்!

விலைவாசி குறித்து இந்தத் தேர்தலில் எந்தப் பேச்சும் எழவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். எதற்கெல்லாமோ போட்டி போட்டுக்கொண்டு மத்திய அரசை திட்டித் தீர்க்கும் பலரும் விலைவாசி குறித்து சிறிதளவும் மூச்சுவிடவில்லை!

இருப்பினும், பாஜக., ஏழைகள் நலன் பாதிக்கப்படுவதாகவும் ஏழைகளுக்கு எதிரான கட்சி என்றும் விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரசார் கூறி வருகின்றனர்! ஆனால் உண்மை நிலை அது அல்ல என்பதும் வழக்கமான பொய் பிரசாரம் இது என்பதையும் சுட்டிக் காட்டும் வகையில் இத்தகைய விலைப்பட்டியலை பலரும் பகிர்ந்து வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.