இந்தத் தேர்தலில் தினகரன் வெறும் ‘டம்மி’தான்! ஜெ.தீபா அதிரடி கருத்து!

Published:

jayadeeba - 2026

17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெ.தீபா, செய்தியாளர்களிடம் பரபரப்பாக சிலவற்றைக் கூறினார்.

தமிழகத்தில் திமுக., அதிமுக.,என இரு பெரும் கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைக்கப் பட்டு, போட்டி பலப் பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாற்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்களும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேட்பாளர்களும், தொடர்ந்து டிடிவி தினகரனின் சார்பில் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப் பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். முன்னர் தாமும் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியிருந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு, அதிமுக., வுக்கு ஆதரவாக தான் இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, இந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அதிமுக தலைமை அழைத்தால் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் இந்தத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்களின் மனம் புண்படும்! அதனால் நான் போட்டியிடவில்லை.

அதிமுக., திமுக., ஆகிய கட்சிகள் தான் சரியான போட்டியில் உள்ள கட்சிகளாக கருதப்படுகிறது. டிடிவி தினகரன் கட்சி இந்தத் தேர்தலில் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்க வில்லை” என்று கூறினார் ஜெ.தீபா.

Related articles

Recent articles

spot_img