தமிழகத்தில் பாஜக., வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்!

கோவை சற்றுமுன் தமிழகம் திருச்சி நெல்லை

bjp tamilisai filed naminatio - 2026

சென்னை: 17வது மக்களவைக்கு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் பாஜக., வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

பாஜக., வேட்பாளர்களாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

bjp nakendran filed namination - 2026

இந்நிலையில், இன்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக., தமிழகத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், கோயமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் சி.பி, ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் ஹெச்.ராஜா ஆகியோர் தங்களது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தனர்.

bjp cpr filed namination - 2026

வேட்பு மனு தாக்கலுக்கு நாளையே கடைசி நாள் என்பதால் இன்றும் நாளையும் வேட்புமனுவை தாக்கல் செய்ய பல்வேறு கட்சியினரும் வருவார்கள் என்பதால், தேர்தல் அதிகாரி அலுவலகங்கள் பரபரப்பாகக் காணப்பட்டன.

bjp raja fled namination - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.